
இரண்டு பிள்ளைகளுடன் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தாயொருவர், கண்டி, சுதுஹும்பொல பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.தனது 07 வயது மகள் மற்றும் 09 மாத கைக்குழந்தையுடன் இன்று காலை சுதுஹும்பொல பிரதேச புகையிரத பாதைக்கு வந்த குறித்த தாய், நாவலப்பிட்டியில் இருந்து கண்டி நோக்கி சென்ற புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.
இதன்போது 07 வயது மகள் புகையிரத தண்டவாளத்தில் இருந்து வெளியில் பாய்ந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் தண்டவாளத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.கணவர் வேறொரு பெண்ணுடன் தகாத தொடர்பை ஏற்படுத்தி இருப்பதனால் இந்த முடிவை எடுத்ததாக தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண் கூறியுள்ளார். குறித்த தாயையும் இரண்டு பிள்ளைகளையும் கண்டி தலைமையக பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிடம் பிரதேசவாசிகள் ஒப்படைத்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.





