கொலை முயற்சிக்காக தமிழகத்தில் இலங்கையர் கைது!!

517

1 (8)

காவற்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து, 19 வயதான ஈழத் தமிழர் ஒருவர் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக, தெரிவிக்கப்படுகிறது.காவற்துறை அதிகாரி நகர் வலம் வரும் போது, குறித்த இளைஞரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிய நிலையில், அவரை சோதனை செய்ய முயற்சித்த போது, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.