
சிலாபம் பள்ளம், வில்பத்த பிரதேசத்தில் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வில்பத்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளம் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





