வவுனியாவில் குடும்பப்பெண் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

661

Visam

வவுனியாவில் இன்று பிற்பகல் 2மணியளவில் குடும்பப்பெண் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா கல்மடு முல்லைக்குளம் பகுதியைச் சேர்ந்த மதன் நர்மதா என்ற 21 வயதுடைய திருமணமான குடும்பப்பெண்னே இன்று பிற்பகல் அலரி விதையினை அரைத்துக் குடித்து ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஷம் அருந்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை ஆபத்தான நிலையில் உள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.