யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புலமைப் பரிசில்!!

503

Walmart-Scholarship-awards

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இராணுவத்தினரின் குடும்பங்களிலுள்ள சிறுவர்களுக்கும் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

மாலை 03.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 50,000 ரூபா பணமும் வழங்கப்படவுள்ளது.