அமெரிக்காவில் பனிப்புயல் – 9 பேர் பலி, 7000 விமான சேவைகள் இரத்து!!

566

546348919Untitled-1

அமெரிக்காவில் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெரும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இதன்காரணமாக வாஷிங்டனில் அனைத்து வகையான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வட கரோலினாவில் ஒரு இலட்சம் வீடுகள் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருளில் தவிக்கின்றன.

20 மாகாணங்களில் 8½ கோடி மக்கள் பனிப்புயலின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். நேற்று மதியம் வரையில் பனிப்புயலால் ஏற்பட்ட விபத்துகளில் வடகரோலினா, வெர்ஜினியா, கென்டக்கி, டென்னிசி மாகாணங்களில் 9 பேர் பலியாகினர். வெர்ஜினியாவில் மட்டும் 989 கார் விபத்துக்கள் நடந்துள்ளன. கென்டக்கி மாகாணத்தில் நேற்று 18 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. வாஷிங்டனில் 7 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.

இன்று வாஷிங்டனில் பனிப்புயல் கடந்து செல்கிறபோது 30 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். 1922-ல் அதிகபட்சமாக 28 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. பனிப்புயலால் அமெரிக்க மக்களின் வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.