
புனேவில் சிறுவன் ஒருவனை ‘இந்து ‘ என்ற காரணத்தால் 3 பேர் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர்.17 வயது சிறுவன் சாவன் ரதோடின் தந்தை தர்மா ரதோட் பொலிசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.அதில், தனது சகோதரியுடன் கோபித்துக் கொண்டு, எனது மகன் சில நாட்களாக வீட்டுக்கு வரவில்லை.
இந்த சம்பவம் பற்றி கேள்விபட்டதும் நான் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றேன். அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டேன்.அப்போது அவனால் சொல்ல முடியவில்லையென்றாலும். நான் புரிந்து கொண்டு, நீ இந்து என்பதால் இதனை செய்தார்காள? என்று கேட்டேன். அதற்கு அவன் ஆமாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
சாவன் இறக்கும் தருவாயில் அவனது வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்துள்ளனர்.அதில் சாவன் கூறுகையில்,பந்தாபூரில் எனது குடும்பத்தினர் உள்ளனர். அவர்களிடம் கோபித்துக் கொண்டு புனே வந்து வேலை தேட ஆரம்பித்தேன்.ஒரு இடத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது 3 பேர் என்னிடம் இந்த இடத்தில் சிறுநீர் கழிக்கிறாயே? என்று என்னை சத்தம் போட்டனர்.
பின்னர் எனது பெயரை கேட்டனர். நான் ‘இந்து’ என்று அறிந்து கொண்ட அவர்கள் என் மீது ஒரு கேனில் இருந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டனர் என கூறியுள்ளான்.இந்த விவகாரத்தை புனேவை சேர்ந்த ‘பஞ்சாரா கிராந்தி தல் ‘ அமைப்பு கையில் எடுத்து போராடி வருகிறது.இந்த விவகாரம் குறித்து புனே நகர துணை கமிஷனர் துஷார் தோஷி கூறுகையில், மிகவும் கெடூரமான இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகிறோம்.ஆனால் இதற்கு மத விவகாரம் காரணமாக இருக்காது என்று கருதுகிறேன்.
முதலில் சாவனை அடித்துள்ளனர். பின்னர் அவரை பெட்ரோல் குடிக்க வைத்து, தீ வைத்துள்ளதாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.சிறுவனை எரித்து கொன்றது தொடர்பாக சூபேர் தம்போலி, இம்ரான், இப்ராஹிம் ஷேக் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வருகிற சனவரி 25ம் திகதி வரை கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.





