
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி கபுறடி வீதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றை உடைத்து நாலரை இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு மறுநாள் அதிகாலை திறந்து பார்த்தபோது கடையின் முன் பகுதியை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பணப்பெட்டியை உடைத்து நாலரை இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் சொகோ விசேட பொலிஸ் பிரிவினர் ஆகியோர் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





