
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும், சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரைக்கு அமைய சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபாலவால் குறித்த குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை விரைவாகவும் உரிய முறையிலும் மேற்கொள்ளும் வகையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக ஜெயசுந்தர பண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய உறுப்பினர்களாக, லக்ஷ்மி சோமதுங்க, கமல் ஜயசிங்க, ராஜபிரிய பாலசூரிய மற்றும் ரோஹன சில்வா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.





