வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு வுச்சங்கத் துக்கு சொந்தமான கட்டிடத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் மின் ஒழுக்கு காரணமாக தீவிபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக நகரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துரித கதியில் முயற்சிகளை மேற்கொண்ட பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்கள்மின்சாரசபை மற்றும் பொலிசாரின் முயற்சியின் காரணமாக மேற்படி தீ விபத்து சம்பவம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வவுனியா, பஸார் வீதியில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கோப் சிற்றியிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கடையில் தீ பரவுவதை அவதானித்த சிலர் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து தண்ணீர் தாங்கியுடன் துணையுடன் தீயை வவுனியா பொலிசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
படங்கள் : அருள்







