
ஹங்வெல்ல – பொது மயானம் அருகில் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்த ஒருவர், கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு, இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ரனாலை – சுதவிலை பிரதேசத்தினை வசிக்கும் 29 வயதினையுடைய இளைஞர் என ஹங்வெல்ல காவற்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தனியார் பேரூந்து ஒன்றின் நடத்துனர்.தனது சேவை முடித்து விட்டு, வீடு திரும்பும் பொழுது இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.கொலையுடன் சம்பந்தமான சந்தேகத்திற்குரியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.நேற்று மதியம் இருவருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரன்பாட்டின் காரணமாகவே குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.





