சிறுமியின் காதில் இருந்து சாரை சாரையாக வெளியேறும் எறும்பு!!

791

Ant-Control

குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகில் தீசா என்ற இடத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஸ்ரேயா டார்ஜி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரேயா காதில் எறும்பு ஊருவது போல் அரிப்பு ஏற்பட்டது. உடனே தந்தை சஞ்சய் தார்ஜி அவளை அருகில் உள்ள காது மூக்கு தொண்டை நிபுணரிடம் அழைத்துச் சென்றார். அவர் சிறுமியின் காதில் பெரிய அளவிலான கட்டெறும்புகள் திரிவதை கண்டு பிடித்தார். அப்போது 10 எறும்புகள் வரை வெளியே எடுக்கப்பட்டது.

அதன் பிறகு 2 வாரங்கள் கழித்து மீண்டும் இதேபோல் சிறுமியின் காதில் இருந்து சாரை சாரையாக கட்டெறும்புகள் வெளியே எடுக்கப்பட்டது.சிறுமியின் காதில் டாக்டர்கள் லேபட்ராஸ் கோபிக் கேமராவை செலுத்தி ஆய்வு செய்து பார்த்த போது உள்ளே வேறு எறும்போ அல்லது எறும்பு முட்டைகளோ எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் சில நாட்களில் திடீர் என்று எறும்புகள் காதில் உருவாகிறது. இதை பார்த்து டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி பிரபல டாக்டர் ஜவகர் தல் சானியா கூறும் போது, எனது 32 ஆண்டு மருத்துவப் பயிற்சியில் இது போன்று காதில் எறும்பு உற்பத்தியை நான் கண்டதில்லை. மருத்துவ துறை வரலாற்றிலும் இதுபோன்று நடந்தது இல்லை. பெரிய எறும்புகள் சிறுமியின் காதில் வசித்து வருகின்றன. எறும்புகள் சிறுமியின் காதை கடிக்கின்றன. ஆனால் சிறுமிக்கு வலி தெரியவில்லை. காதில் சேதமும் இல்லை. கடந்த வாரம் சிறுமியின் காதில் இருந்து 10 எறும்புகள் எடுத்தோம். நேற்று மீண்டும் 10 எறும்புகள் உள்ளே இருந்து வருகிறது. இது மருத்துவத்தில் அதிசயமாக உள்ளது என்றார்.