மகனை கொலை செய்ய உத்தரவிட்ட முன்னாள் வட கொரிய அதிபர் : காரணம் என்ன?

447

kimJong_threts_003

முன்னாள் வடகொரிய அதிபர் தமது மகனை கொலை செய்ய தனது நெருங்கிய சகாக்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.வட கொரியாவின் நிறுவனரும் முன்னாள் அதிபருமான Kim il-Sung தமது மகனான Kim Jong-il என்பவரை கொலை செய்துவிடும்படி தமது நெருங்கிய சகாக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லெனினின் சித்தாந்தகளுக்கு எதிராக வடகொரியா நாட்டை சீர்திருத்தம் செய்தால் தமது மகனை கொன்றுவிடும்படி இறப்பதற்கு முன்பு அவர் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.வட கொரியாவின் முன்னாள் புலனாய்வுத்துறை தலைவராக செயல்பட்ட Ra Jong-yil இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்படி அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ள சில உறுப்பினர்களுக்கு சுறப்பு துப்பாக்கிகளை வழங்கியுள்ளதாகவும்,தாம் வகுத்துள்ள கோட்பாடுகளில் இருந்து விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டால் கொலை செய்து விட ரகசிய உத்தரவினை பிறப்பித்திருந்துள்ளார்.

மேலும் வட கொரியாவை 10 பேர் கொண்ட சிறப்பு குழுவினரே ஆள வேண்டும் என்ற புது திட்ட்த்தையும் அவர் வகுத்து வைத்திருந்தார்.ஆனால் அந்த திட்டம் நடைமுறைக்கு வரும் முன்னரே அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காலமானார்.அவரது திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தற்போது இருப்பதை விட மிக கடுமையான சட்ட திட்டங்களுடன் வட கொரியாவில் ஆட்சி நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது.