உடல் எடை குறைய பழைய சாதம்!!

360

7307494508_7e1241237e_o

நம் முன்னோர்கள் சத்துமிக்க உணவு சாப்பிட்டதால் தான் அவர்கள் வயாதானாலும் சிறிதும் சக்தி குறையாமல் இருந்தனர். அப்படி அவர்கள் உண்ணும் உணவுகளில் ஒன்று பழைய சாதம். முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது.கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக அதிகரிக்கின்றது. “காலை உணவாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் களைப்பின்றி, அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

இரவு தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் எட்டிப்பார்க்காது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்”.இது உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தருவதனால் சளி உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நன்று.