சகோதரரின் திருமணத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சகோதரி!!

284

bomb_hoax_002

பிரித்தானியாவில் சகோதரரின் திருமண நிகழ்ச்சியை சீர்குலைக்க அவரது சகோதரியே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் ஸ்டிரவுட் பகுதியில் குடியிருந்து வரும் 44 வயதான Kate Thorley என்பவர் சம்பவத்தன்று Stonehouse பகுதியில் உள்ள ஹொட்டெல் ஒன்றில் தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.

தமது சகோதரரின் திருமண நிகழ்ச்சி அங்கு நடைபெற இருப்பதாகவும், அந்த திருமணத்தில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.தமக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடக்கவிருப்பதால், குடும்பத்தினர் அனைவரையும் தாம் கொல்ல திட்டமிட்டு இருப்பதாகவும்,

அதனால் வெடிகுண்டு ஒன்றை ஹொட்டெலுக்கு அனுப்ப உள்ளதாகவும் கடுமையான கோபத்துடன் தெரிவித்துள்ளார்.இதில் பயந்துபோன அந்த ஹொட்டெல் ஊழியர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவல் அறிந்த பொலிசார் உடனடியாக Thorley குடியிருக்கும் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஓராண்டு சமூக ஒழுங்கை கடைபிடிக்கவும், 20 நாட்கள் புனர்வாழ்வு நடவடிக்கை திட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.ஆனால் தமக்கு புனர்வாழ்வு நடவடிக்கையில் ஆர்வம் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பொலிசார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டில் வெடிகுண்டு எதுவும் இல்லை எனவும்,அவர் ஹொட்டெலுக்கு அனுப்புவதாக கூறியது வெறும் புரளி எனவும் விசாரணை அதிகாரிகள் புரிந்துகொண்டுள்ளனர்.அதுமட்டுமின்றி, Thorley மதுவுக்கு அடிமையானவர் என்பதால் அவரது குடும்பத்தினரே சகோதரரின் திருமணம் குறித்து கலந்தாலோசிக்கவில்லை என கூறப்படுகிறது.