ஊழலற்ற நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 83வது இடம்!

389

1942300506Trans

2015ம் ஆண்டிற்கான உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.

நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

இதனடிப்படையில் 2015ம் ஆண்டிற்கு வெளியிடப்பட்டுள்ள பட்டியல்படி டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்தை பெற்றுள்ளதுடன் பின்லாந்து 2வது இடத்தையும், சுவீடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.

இலங்கை இந்தமுறை 37 புள்ளிகளைப் பெற்று 83வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு 38 புள்ளிகளைப் பெற்ற இலங்கை 85வது இடத்தில் இருந்தது. அதன்படி இலங்கை இந்த ஆண்டு 2 இடங்கள் முன்னேறி உள்ளது.

இலங்கையின் அண்டை நாடான இந்தியா 76 வது இடத்தைப் பெற்றுள்ளதுடன், சீனா 83 வது இடத்தைப் பெற்றுள்ளது.

இதேவேளை ஐக்கிய இராச்சியம் 10வது இடத்தையும் ஐக்கிய அமெரிக்கா 16வது இடத்தையும் பெற்றுள்ளது.

ஆபிரிக்க நாடான சோமாலியா மற்றும் ஆசியா நாடான வடகொரியா ஆகியன ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.