
சுகாதார சேவையின் தரத்தை மேலும் உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். ஒரு நாட்டின் அபிவிருத்தியில் சிறந்த தெளிவான துறையாக தரமான சுகாதார துறை இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.





