புலமைப்பரிசில் பரீட்சையில் 34,862 மாணவர்கள் 35 புள்ளிகளுக்கும் குறைவு!!

726

scholarship

2015ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 3 இலட்சத்து 41 ஆயிரத்து 119 மாணவர்களில் 34 ஆயிரத்து 862 மாணவர்கள் 35 புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி. டலஸ் அழகப்பெரும எழுப்பியிருந்த வினாக்களுக்கு கல்வி அமைச்சு சபையில் ஆற்றுப்படுத்திய பதில்களிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 41 ஆயிரத்து 119 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் 51 ஆயிரத்து 683 பேர் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். 2 இலட்சத்து 54 ஆயிரத்து 690 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.