விதவைகள் ஆசிர்வதிக்க நடந்த அசத்தல் திருமணம்!!

267

widow_marriage_002

இந்தியாவில் கணவரை இழந்த 18,000 ஆயிரம் பெண்கள் ஆசிர்வாதம் வழங்க திருமணம் நடந்துள்ளது.குஜராத்தின் பாலன்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஜிஜேந்திரா பட்டேல், இவரது இளையமகன் ரவியின் திருமணம் ஹிம்மத் நகரில் நடைபெற்றது.

மிக வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த ஆசைப்பட்ட தொழிலதிபர், குஜராத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.அதுமட்டுமின்றி அவர்களுக்கு திருமணத்திற்கு வருவதற்கு வாகன வசதிகள், தங்குவதற்கு இடம், உணவு உள்ளிட்டவை மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

மொத்தமாக 18 ஆயிரம் பெண்கள் ஆசிர்வாதம் வழங்கினர், இவர்களுக்கு பசு மாடு பரிசாக வழங்கப்பட்டது.இது குறித்து ஜிஜேந்திர பட்டேல் கூறுகையில், கணவர்களை இழந்த பெண்கள் இந்த சமூகத்தில் புறக்கணிக்கப்படுவது எனக்கு மனதளவில் துயரத்தை அளித்தது. அதனால்தான் எனது மகன் திருமணத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முயற்சித்தேன்.அவர்களால் ஆசிர்வதிக்கப்படும்போது எனது பிள்ளைகளின் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.