
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ந்த தொடருக்கு முன்பாக 114 புள்ளிகளுடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்ததன் மூலம் 109 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு இறங்கியுள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணி ‘நம்பர் ஒன்’ கிரீடத்தை இழந்திருக்கிறது. இந்திய அணி 110 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியா 109 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 106 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.





