நுவரெலியாவில் கேபிள் கார் திட்டம்!!

493

images

நுவரெலியா நகரத்தை அண்மித்த பிரதேசங்களில் கேபிள்கார் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று பிற்பகல் நுவரெலியாவில் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், 06 மாத காலத்துக்குள் இந்த பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், அதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக நுவரெலியா நகர முதல்வர் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்தார்.