கஹாவத்த – கனேகம பிரதேசத்தில் நீர்வீழ்ச்சி ஒன்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.நேற்று மாலை குறித்த இளைஞர்கள் இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், லெல்லுபிடிய பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 19 வயதான இரண்டு பேர் ஆகும்.சடலங்கள் கஹாவத்த மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹாவத்த காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.