60 வயது முதியவருக்கு அடுத்தடுத்து 23 முறை தொடர்ந்து மாரடைப்பு: மறுபிறவி எடுத்த அதிசயம்!!

744

heart-attack-03

60 வயது முதியவருக்கு அடுத்தடுத்து 23 முறை தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தீவிர புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்.இவர் தனது 7 வயது பேரனுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு நடந்த இசிஜி பரிசோதனையில் அவருக்கு அடுத்தடுத்து பலமுறை மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.தொடர்ந்து பல முறை இதயம் விட்டுவிட்டு துடித்ததால், இதயகுழாயில் ஏற்பட்ட அடைப்பை மருத்துவர்களால் சரிசெய்ய இயலவில்லை.

இதனையடுத்து ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் ஸ்டெண்ட் சிகிச்சை மூலமாக இதயக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்துள்ளனர். தற்போது அவர் உடல் நலம் தேறிவருகிறார்.அவர் வழக்கமான தனது பணிகளை தொடரலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அவர் கூறுகையில், மீண்டும் எனக்கு கிடைத்துள்ள புதிய வாழ்க்கையை வாழ திட்டமிட்டுள்ளேன்.இதற்காக தினமும் காலையில் 20 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்கிறேன்.மருத்துவர்களால் தயாரிக்கப்பட்ட அட்டவணையில் உள்ள உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறேன்.கடந்து செல்லும் ஒவ்வொரு நாளையும் நான் உற்சாகத்துடன் கழிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.