
உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி சாப்பிட வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மொட்டையடித்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.உத்திரபிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தை சேர்ந்தவர் அவ்தேஷ் சவிதா, இவர் அதே ஊரைச் சேர்ந்த மூன்று நபர்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்ததாக தெரிகிறது, அத்துடன் அவர்களை மாட்டுக்கறி சாப்பிட வைத்தாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவவே, விரைந்து வந்த பஜ் ரங் தளத்தை சேர்ந்த சிலர் சவிதாவின் வீட்டை முற்றுகையிட்டனர்,.அவரை வெளியே இழுத்து வந்ததுடன் அவரது தலையை மொட்டையடித்து புருவத்தையும் மீசையையும் எடுத்தனர்.பின்னர் அவரது கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து நகருக்குள் கழுதை மீது ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் சவிதாவை மீட்டனர், மேலும் இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.





