மரமாக உருமாறி வரும் மனிதர்: அரிய வகை நோயால் அவதிப்படும் பரிதாபம்!!

292

tree_rootsman_007

வங்கதேசத்தின் குல்னா பகுதியில் இளைஞர் ஒருவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரமாக உருமாறி வருவது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்தின் குல்னா பகுதியில் வசித்து வரும் 25 வயதான அபுல் பஜந்தர் என்பவர் அரிய வகை தோல் வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.அவரது கை விரல்கள் மரத்தில் இருந்து பட்டைகள் உருவாவது போன்று தடிமனாக நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் உள்ளன.இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரை டாக்கா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

இதனிடையே இந்தோனேசியாவில் இதேப்போன்று அரிய வகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் சமீபத்தில் இறந்துள்ளார்.ஆனால் அவரது உயிரிழப்புக்கு காரணம் அவருக்கு இருந்த நோய் அல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியிருந்தது.மருத்துவமனையில் இருந்து திரும்பிய அவர் தமது உடம்பில் இருந்து 6 கிலோ மருக்களை அகற்றியுள்ளதாக அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார்.