போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட இருவருக்கு இந்திய நீதிமன்றத்தால் 14 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சென்னை புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் வசம் இருந்து சுமார் நான்கு கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஒரு தொகை வௌிநாட்டு நாணயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இருவரும் போலிப் பெயர்களில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த வழக்கு விசாரணைகளின் முடிவில், சந்தேகநபர்களுக்கு 14 வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும் 40,000 இலட்சம் ரூபா (இந்திய ரூபா) அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.