திருகோணமலையில் கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்!!

722

eeb4f-bear

திருகோணமலை – நாமல்வத்த காட்டுப் பகுதியில் இன்று (31) காலை ஒருவர் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதூரைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கரடியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கூலிக்காக மாடுகளை மேய்க்கும் இவர், வழமை போன்று இன்றையதினம் காலையிலும் மாடுகளை மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுகொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக மகாதிவுள்வௌ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.