
650 பயணிகளுடன் அதிசொகுசு கப்பலொன்று அம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. யூரோப் 2 சுற்றுலா பயணிகள் கப்பலே இவ்வாறு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், நேற்று இலங்கையை குறித்த கப்பல் வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் யால, உடவலவ, புத்தல, கதிர்காமம், எல்ல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் பஸ்ஸின் மூலம் செல்லவுள்ளனர்.சுமார் மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலம் உலகின் பல நாடுகளுக்கும் இந்த பயணிகள் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





