பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!!

874

1 (11)

13 வயதான பாடசாலை மாணவி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் காலி – தங்கொட்டுவ பிரதேசத்தின் செங்கல் தொழிற்சாலை தொழிலாளர்கள் குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.


இந்த 13 வயதான பாடசாலை மாணவியை 28 வயதான நபர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர் குறித்த சிறுமியின் சிறிய தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிறுமியின் தாயார் கடைக்குச் சென்றிருந்த வேளையிலேயே குறித்த நபரால், சிறுமியை துஷ்பியோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.