சிறுமியிடம் அத்துமீறிய நபர்: ஆடையை கிழித்து அடித்து துவைத்த உறவினர்கள்!!

1112

birhday_bite_002

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை, அச்சிறுமியின் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் சட்டையை கிழித்து அடித்து துவைத்துள்ளனர்.பிரேசில் நாட்டின் Complexo de Alemão என்ற பகுதியில் வசித்து வந்த பெண்மணி ஒருவர், தனது 5 வயது மகளின் பிறந்தநாளை வெகுசிறப்பாக கொண்டாட முடிவுசெய்துள்ளார்.

இதற்காக உறவினர்கள் மற்றும் அருகில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அப்பெண்மணியின் மற்றொரு மகளினை காணவில்லை.மகளை தேடிப்பார்க்கும்போது, அவர்கள் வீட்டில் உள்ள அறை ஒன்றில் நபர் ஒருவர் அச்சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனைப்பார்த்த உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் என சுமார் 20 பேர் சேர்ந்து, அந்நபரின் சட்டையை கிழித்து அடித்து துவைத்துள்ளனர்.வலி தாங்க முடியாத அந்நபர் தெருவில் சுருண்டு படுத்துவிடுகிறார், தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.