சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுக்கும் யோஷித!!

467

timthumb

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் முதல் மூன்று வேளை உணவுகளையும் வீட்டில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அனுமதி கேட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய அத தெரணவிற்கு கூறினார்.

முதல் தினம் அவர்கள் சிறசை்சாலை உணவுகளை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், அதனை புறக்கணித்ததன் பின்னர் அவர்களின் கோரிக்கை படி வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.