பெல்மதுளை மரக்கலஎல்ல நீர்வீழ்ச்சியில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம்!!

512

118487070815289899drawn2

பெல்­ம­துளை மரக்­க­ல­எல்ல நீர்வீழ்ச்சி யில் நீராடச் சென்ற இரு இளை­ஞர்கள் நீரில் மூழ்கி பலி­யா­கி­யுள்­ளனர். இச்­சம்­பவம் கடந்த சனிக்­கி­ழமை மாலை இடம்­பெற்­றுள்­ளது. இந்தச் சம்­ப­வத்தில் பெல்­ம­துளை லெல்­லோ­பி­டிய பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்­க­ளான ஆர்.ஏ.புபுது அசங்க விஜே­சே­கர (வயது 20) மற்றும் அநுஷ்க லக்மால் ஹஷான் (ருக்மல்) (வயது 19) ஆகிய இரு­வ­ருமே பலி­யா­கி­யுள்­ளனர்.

பலி­யான இரு­வரின் சட­லங்கள் மீட்­கப்­பட்டு நேற்­று­முன்­தினம் காவத்தை வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அதி­காரி ஆர்.டி.பி.எச்.ரத்­ன­வீர மற்றும் பெல்­ம­துளை மரண பரி­சோ­தகர் ரத்­ன­சீலி ஆகியோர் தலை­மையில் மரண விசா­ர­ணை இடம்­பெற்­றது. மேற்­படி இரு­வரும் நீரில் மூழ்கி மூச்சுத் திணறியே பலியானதாக விசாரணையின் போது தெரியவந்தது.