ஆசிய நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்ததாக இலங்கை பாராளுமன்றம் மாற்றியமைக்கப்படும்!!

568

1 (28)

தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பின் பின்னர் இலங்கையின் பாராளுமன்றமானது ஆசிய நாடுகளின் மத்தியில் மிகவும் சக்தி வாய்ந்த பாராளுமன்றமாக மாற்றியமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம் என்ற தொனிப்பொருளில் ஆசிய நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கான விசேட செயலமர்வு இன்று கொழும்பில் அமைந்துள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஆரம்பமானது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் கருஜெயசூரிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ, ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க உட்பட ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படும் பாராளுமன்ற பிரதிநிதிகள் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் பங்குபற்றியிருந்தனர்.