இந்தியாவில் முதல்முறையாக நீருக்கு அடியில் பிரம்மாண்ட உணவகம்!!

497

sea_restraunt_003

இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத் நகரில் நீருக்கு அடியில் பிரம்மாண்ட உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஏராளமான உணவகங்கள் நீருக்குள் இருப்பது போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் நாட்டிலேயே முதல்முறையாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நீருக்கு அடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

பாரத் பட் என்ற தொழிலதிபருக்கு சொந்தமான The Real Poseidon என்ற சைவ உணவகம்தான் அது.பூமிக்கடியில் 20 அடி ஆழத்தில் 1.50 லட்சம் லிட்டர் தண்ணீரால் நிரம்பிய மீன் கண்காட்சியகத்திற்கு உள்ளே இந்த உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த மீன் காட்சியகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் வகைகள் உள்ளன.

32 இருக்கைகளை கொண்ட இந்த ரெஸ்டாரண்ட்டில் தாய்லாந்து, சைனீஸ், மெக்சிகன் மற்றும் இந்திய உணவுகள் பரிமாறப்படுகின்றன.எனினும் சைவ உணவுகள் மட்டுமே இங்கு பரிமாறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.