இன்று (02.02.2016) அதிகாலை 3.00 மணியளவில் பரந்தன்-முரசுமோட்டை இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிக்கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகமாக வந்த வாகனம் சந்தி ஒன்றிலிருந்த பாலத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் Airtel நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பயணித்ததாகவும், இவ் விபத்தில் வாகன ஓட்டுனர், நடத்துனர் உட்பட பின்னால் இருந்த பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எமக்குத் தெரிவித்தனர்.
-R.துசாந்-














