அதிக இரத்த போக்கு  போக்கும் வில்வம்  இலையின் மருத்துவ குணம் !!

578

12670556_1167529313264735_5342262640623849446_n

வில்வம் சக்திவாய்ந்த மூலிகைகளுள் ஒன்று. சாதாரண காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய் வரை குணப்படுத்தும் வல்லமை படைத்தது. ஒரு கைப்பிடி வில்வ இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம் தலா 10 கிராம் சேர்த்து தாராளமாக நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் காலை, மாலையில் அருந்தி வந்தால் காய்ச்சல் சரியாகும். கண்வலி, கண் சிவத்தல் உள்ளிட்ட கண் நோய்கள் இருந்தால், வில்வ இலைத்தளிரை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் உடனடியாக குணம் கிடைக்கும்.

.மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் வில்வ இலையை விழுதாக அரைத்து கொட்டைப்பாக்கு அளவுக்கு சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் பலன் கிடைக்கும். பெரும்பாடு என்னும் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது ஒரு எளிய வைத்தியமாகும்.

இதயநோயாளிகள், கல்லீரல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு வில்வப்பழத்தை ஜூஸாக்கி குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். வில்வ இலைத்தளிருடன் சிறிது துளசி, மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

வில்வ இலையுடன் இஞ்சி, பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி 48 நாட்கள் அருந்தி வந்தால் மூலம் முழுமையாக சரியாகும். 100 வருடங்கள் ஆன வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குணமாவதற்கு வாய்ப்புள்ளது.