இலங்கையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட நீராவி புகையிரதம்!!(படங்கள்)

1143

 
புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவி புகையிரதமாக இயங்கியது.

இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரை இன்று (02.02.2016) சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இன்று நடத்தப்பட்ட புகையிரதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பலரும் பயணம் செய்தனர்.

அட்டன் புகையிரத நிலையத்தில் குறித்த புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்ட போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மேற்படி புகையிரதத்தை புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

DSC00943 DSC00944 DSC00946 DSC00947 DSC00948 DSC00954 DSC00956 DSC00959 DSC00960 DSC00963 DSC00967 DSC00970 DSC00972 DSC00973 DSC00974 DSC00976 DSC00978 DSC00981 DSC00982