
19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ண போட்டிகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அணி சார்பில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் தனது இரு கைகளாலும் சிறந்த முறையில் பந்து வீசுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இத்தகைய திறமை அனைவரிடமும் காணப்படாத ஒன்று என கிரிக்கெட் விற்பன்னர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இவர் இத்தகைய முறையில் பந்து வீசியமை குறிப்பிடத்தக்கது.





