பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் சாலையில் அடித்துக் கொலை! வீடியோவால் பரபரப்பு!!

1135

murder

பட்டப்பகலில் வாலிபர் ஒருவரை 3 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள வைக்கமைச் சேர்ந்த ஷபீர் (23), கடந்த சனிக்கிழமை அவர் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது 3 வாலிபர்கள் அவரது பைக்கை வழிமறித்து கட்டை மற்றும் கிரிக்கெட் பேட்டால் ஷபீரை ஈவு, இரக்கமின்றி அடித்துக் கொலை செய்துள்ளனர்.மேலும் ஷபீருடன் வந்த நபரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது பொலிசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காவல் துறை ஆய்வாளர் இதுகுறித்து கூறுகையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கும் என்று சந்தேகிக்கிறோம்.ஷபீர் மற்றும் அவரது நண்பர் உன்னிகிருஷ்ணனை எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகியதாக தெரிவித்துள்ளார்.