
T 20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளது என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.துபாயில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த பிரையன் லாரா கூறுகையில், இந்தியாவில் நடைபெறுவதால் கிண்ணத்தை இந்தியாவே வெல்லும்.
தற்போதைய நிலையை பொறுத்தவரையில் உலகின் சிறந்த அணிகளுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்தியா வெற்றி பெறும்.இதேவேளை சிறந்த வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் ஒற்றுமையுடன் விளையாடினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.





