யாழ்ப்பாணம் பலாலி வீதி விபத்தில் பலரின் நிலைமை கவலைக்கிடம்!!

550

 
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் சற்று நேரத்திற்கு முன்னர் பாரிய வாகன விபத்து ஒன்ற இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் தடம்மாறி பயணித்த குறித்த தனியார் பேரூந்து அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடனும், மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரூந்தின் அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் அருகிலிருந்த தனியார் வங்கி கட்டடத்துடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

1 2 3 4 5