இலங்கையின் 68வது சுதந்திர தினக் கொண்டாட்டம் : சம்பந்தன் பங்கேற்பு : மஹிந்த அணி புறக்கணிப்பு!!

519

 
இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்துகொண்டுள்ளார். அதேவேளை சுதந்திர தின அரச நிகழ்வை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அதிருப்தி அடைந்திருப்பதால் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை அருகிலுள்ள விகாரைகளில் கொண்டாடுவதற்கு தீர்மானித்ததாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

இதேவேளை சுதந்திரதின நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்நாட்டு,வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள், முப்படைத் தளபதிகள், சர்வமதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

1 2 3 4 5 6