இறுதி நேரத்தில் தமிழ் மொழியில் பாடப்பட்ட தேசிய கீதம்!!

841

SL

தேசிய அரசாங்கத்தின் ஆட்சியில் இன்று கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடைபெற்ற 68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

சுதந்திர தின நிகழ்வு ஆரம்பத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதிலும், தமிழ் மொழியில் இசைக்கப்படவில்லை.

ஆயினும் நிகழ்வின் இறுதிநேரத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது தேசிய கீதம் தமி­ழிலும், பாடலாம் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.
இந்தத் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ, தூய்­மை­யான ஹெல­உ­று­மய கட்­சியின் தலை­வரும் எம்.பி.யுமான உதய கம்­பன்­பில ஆகியோர் கடும் எதிர்ப்­புக்­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்த நிலை­யி­லேயே இன்­றைய சுதந்­திர நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழில் பாடு­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 1949 ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின வைபமொன்றின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.