வவுனியா சிறையிலிருந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பில் 14 பேர் விடுதலை!!

626

 
இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று (04.02.2016) பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா விளக்கமறியல் சிறையில் இருந்து 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று காலை 9.30 மணியளவில் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி டபிள்யு.ஜி.ஏ. நிரஞ்சன் பெர்ணாந்துவினால் இக் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

சிறு குற்றங்கள் மற்றும் அபராதம் செலுத்தமுடியாமல் சிறையில் இருந்த 11 ஆண் சிறைக்கைதிகளும் 3 பெண் சிறைக்கைதிகளுமே விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

(1) (2) (3)