
செவனகல பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் சிலர் உட்கொண்ட மருந்து விஷமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவனகல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று குறித்த மாணவர்களுக்கு விற்றமின் சி மற்றும் இரும்பு சத்துக்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்பின்னர், 33 மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்த நிலையில் செவனகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இவர்களில் நேற்றையதினம் சிகிச்சை பெற்று திரும்பிய மாணவர் ஒருவர் மீண்டும் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.





