இரு குழந்தைகளை கிணற்றில் வீசி தந்தை தற்கொலை!!

490

old-well-at-fort-charles-nevis-nevis

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காளியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணபாலன்(30). இவரது மனைவி சூரியா(25). இந்த தம்பதியருக்கு மோனிஷா என்ற இரண்டுவயது பெண் குழந்தையும், நிஷா என்ற ஆறுமாத பெண் குழந்தையும் உள்ளன.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் குணபாலன், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். இதனால் வெறுத்துப்போன சூரியா, துடியலூரில் உள்ள அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் கணவர் மீது நேற்று புகார் அளிக்கச் சென்றார். இதைப்பற்றி கேள்விப்பட்ட குணபாலன் ஆத்திரமடைந்தார். குழந்தைகள் மோனிஷா, நிஷா ஆகியோரை நேற்று மாலை தூக்கி வீட்டுக் கிணற்றில் வீசினார்.

பின்னர், விஷத்தை குடித்துவிட்டு மயங்கிக்கிடந்த அவரைக் கண்ட அக்கம்பக்கத்து வீட்டினர், காரமடை வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் மீட்புப்படை வீரர்களுடன் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த , கிணற்றில் இருந்து இரு குழந்தைகளின் பிரேதத்தை மீட்டு வெளியே எடுத்தனர்.பலியான குணபாலன் மற்றும் மோனிஷா, நிஷா ஆகியோரின் பிரேதங்களை பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.