தீவிரவாத அச்சுறுத்தல்: பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் புகைபிடிக்க அனுமதி!!

451

student_smoke_002

புகைபிடிப்பதற்காக வெளியே செல்லும் மாணவர்களை தீவிரவாதிகள் மூளை சலவை செய்வதையடுத்து பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் புகை பிடிக்க பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பிரான்ஸின் பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னர் எப்போது வேண்டுமானாலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற நெருக்கடி நிலையிலே பிரான்ஸ் உள்ளது.இதற்கிடையில் அந்நாட்டில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ள்ளி வளாகத்தில் புகை பிடிக்கக்கூடாது என்பதும் அதில் ஒன்று. இதனால் மாணவர்கள் ஓய்வு நேரத்தின் போது புகை பிடிப்பதற்காக வளாகத்தை விட்டு வெளியே வருகின்றார்.

அப்போது அவர்களை தீவிரவாதிகள் மூலை சலவை செய்வதாக கூறப்படுகிறது.இதனையடுத்து பள்ளி மைதானத்தில் மாணவர்கள் புகை பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிகளின் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு கோரிக்கை வைத்தது.எனினும் இதனை அரசாங்கள் ஏற்க மறுத்துவிட்டது. நாட்டில் உள்ள நெருக்கடி நிலை காரணமாக புகை பிடிப்பதை கட்டுப்படுத்தும் கொள்கையில் எந்த மாறுதலையும் கொண்டு வர முடியாது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால் பள்ளி வளாகத்தில் மாணவர்களை புகை பிடிப்பதற்கு அனுமதிக்கு பள்ளி இயக்குனர்களுக்கு 135 யூரோ முதல் 750 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.எனினும் பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே புகை பிடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.