
நாட்டை உண்மையாய் நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்று பண்டிகையாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உர்ப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இன்று கொண்டாடப்படும் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தாய் இன்றுடன் சுதந்திரம் பெற்று 68 வருடங்கள் ஆகின்றது. கடந்த காலங்களில் நாம் அனுபவித்த அனைத்து துன்பங்களிலிருந்தும் ஜனவரி 8ம் திகதி நாட்டு மக்களுக்கு மீண்டுமோர் புதிய உதயம் கிடைத்தது. எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் தலைமைத்துவ பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து நாட்து மக்களிடம் சமாதானம் சமத்துவம் வலுப்பெற்றிருக்கின்றது.
கடந்து சென்ற சுதந்திர தினங்கள் ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்ட வாழ்க்கையுடன் குடும்ப ஆட்சியில் வாழ்ந்தோம் இப்பொழுது நாம் சுதந்திரமாக செயற்ப்பட முடியும். நல்லாட்சி நாட்டு மக்களுக்கு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சுதந்திர தினம் நாட்டை உண்மையாக நேசிக்கும், நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கும் அனைவருக்கும் இந்த நாள் சுதந்திரத்தை கொண்டாடும் மகிழ்ச்சிக்குரிய நாளாகும்.
நாட்டில் நாம் அனைவரும் சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் நாட்டை மென்மேலும் அபிவிருத்திப்பாதையில் கட்டியெழுப்புவோம் என்ற தூய்மையான எண்ணத்துடன் அனைவருக்கும் எனது இனிய இலங்கைத்தாயின் 68வது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
கே.காதர் மஸ்தான்
பாராளுமன்ற உறுப்பினர் – வன்னி மாவட்டம்
மாவட்ட அபிருத்திகுழு இணைத்தலைவர்
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு





