வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பிரதிஸ்ட மகா கும்பாபிசேக விழா-2016!!

414

 
இலங்கைத் திருநாட்டின் வடபால் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் தலைவாசலாய் பண்டார வன்னியன் காலத்து புராதன நகராய் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய நகராய் விளங்கும் வவுனியா மண்ணில் இருபதாம் நூற்றாண்டின் பழமையுடன் திகழும் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பஞ்சதள இராஜ கோபுரம் சிற்பவேலைப்பாடுகள் வர்ண வேலைப்பாடுகள் சகிதம் கோடி சூரிய பிரகாசத்துடன் காட்சி தர ஆலய உட்பிரகார வேலைகள் சிறப்புற நிறைவு பெற்று,

அழகுற வர்ணம் தீட்டப்பட்டு நிகழும் மங்களம்மிகு மன்மத வருடம் தைத்திங்கள் 27ஆம் நாள் 10.02.2016 புதன்கிழமை துதியை திதியும் சதய நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய காலை 9.00 மணிமுதல் 10.30 மணிவரையான மீனலக்கின சுபவேளையில் ஸ்ரீகந்தசுவாமிப் பெருமானுக்கும், விநாயகர், சண்முகபெருமான், தட்சணாமூர்த்தி, சந்தான கோபாலர், மகாலட்சுமி, சனீஸ்வரர், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெற திருவருள் பாலித்துள்ளது.

அடியவர்கள் அந்நேரமும் அதற்கு முன் பின் இடம்பெறும் கிரியைகளிலும் பங்குபற்றி திருவருள் பெற்றுஉய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

மேலதிக கிரியை விபரங்கள்
கிரியாரம்பம் – 05.02. 2016 – வெளிக்கிழமை
எண்ணெய் காப்பு – 09.02.2016 -செவ்வாய் கிழமை
கும்பாபிசேகம் – 10.02.2016 -புதன் கிழமை

12647600_1145449128808372_225349280_n 12650284_1145449112141707_1475757461_n 12650404_1145448828808402_1493006378_n 12660248_1145449285475023_1071568809_n  12665747_1145449242141694_315037844_n 12674655_1145449215475030_1658884429_n 12695906_1145449185475033_1354584372_n12660478_1145448775475074_125823454_n