இலங்கை, பாகிஸ்தான், மாலைத்தீவு இணைந்து இராணுவ பயிற்சி!!

606

456b3f52643809.img

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் படையினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த இராணுவ பயிற்சி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இரண்டு வாரங்கள் இடம்பெற்றதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.

இதன்போது பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் இந்த நாடுகளுக்கிடையில் விஷேட இராணுவ உறவை மேம்படுத்தக்கூடியதாக இருந்ததாகவும் பாகிஸ்தானின் உயர் இராணுவ அதிகரி ஒருவர் கூறியுள்ளார். இந்த கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கை ஈகல் டேஷ் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது.